புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.

Update: 2023-01-17 18:45 GMT

மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.

தேர்பவனி

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக மின் அலங்காரம் செய்யப்பட்ட தேர்களில் புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் ஆலய வளாகத்தில் இருந்து 5 தேர்களும் பவனியாக புறப்பட்டது.

சிறப்பு திருப்பலி

தேர்கள் கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியை புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில், மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர், மணவாளநல்லூர் பங்குத்தந்தை ஜான் அமலதாஸ், பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர்.

நாகை மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் திருவிழா மறையுரையாற்றினார்.

திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்