மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய பெருவிழா கொடியேற்றம் 13-ந்தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியாளர் ஆலய பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் வருகிற 13-ந்தேதி ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.

Update: 2023-06-05 18:45 GMT


சின்னசேலம், 

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டை கடந்த மிகவும் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் மாதம் 5-ம் தேதி தொடங்கி 14 -ம் தேதி வரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று கெடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஆலயத்தில் காலை, மதியம், மாலையில் திருப்பலி நிறைவேற்றினர். மாலை 5 மணிக்கு மேல் திருக்கொடி பவனியாக கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து ஆராதனைகள் நடந்து, திருத்தல அதிபர் பங்கு தந்தை டி. ஆரோக்கியதாஸ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில்குமார், புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஏ.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் சேலம் மறைமாவட்ட ஆயர் ஏ.ராயப்பன் தலைமையேற்று 100 அடி உயரம் உள்ள கொடிமரத்தில் பெருவிழா கொடியை ஏற்றினார். இதில் மறை மாவட்ட அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள், காரியக்காரர்கள், பங்கு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆடம்பர தேர்பவனி

விழாவில் திசனரி சிறப்பு திருப்பலி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி இரவு திருச்சி மறை மாவட்ட ஆயர் எஸ். ஆரோக்கியராஜ் தலைமையில் பொருத்தனை தேர்பவனியும், 13-ம் தேதி புதுவை கடலூர் உயர்மறை மாவட்டம் பேராயர் கே. பிரான்சிஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர தேர் பவனியும் நடைபெறுகிறது.

விழாவுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகைதருவார்கள். இதையொட்டி அவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பெருவிழா ஏற்பாடுகளை பக்தர்களின் திருத்தல நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் அரசுடன் இணைந்து செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்