எஸ்.எஸ்.எஸ். எண்டர்டெயின்மெண்ட், நளபாகம் கேட்டரிங் சர்வீஸ் சார்பில் பொருட்காட்சி

எஸ்.எஸ்.எஸ். எண்டர்டெயின்மெண்ட், நளபாகம் கேட்டரிங் சர்வீஸ் சார்பில் பொருட்காட்சி நடைபெறுகிறது.;

Update:2023-05-30 00:48 IST

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் ரோடு பாலக்கரை அருகில் உள்ள மைதானத்தில் எஸ்.எஸ்.எஸ். எண்டர்டெயின்மெண்ட் மற்றும் நளபாகம் கேட்டரிங் சர்வீஸ் இணைந்து நடத்தும் லண்டன் பிரிட்ஜ் மற்றும் துபாய் சிட்டி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இப்பொருட்காட்சியில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கண்டுகளிக்கும் வகையில் ஜெயண்ட் வீல் ராட்டினங்கள், டைட்டானிக் கப்பல், ராட்டினம் பிரேக் டான்ஸ், கொலம்பஸ், சுனாமி பேய் வீடு, பனி உலகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், மண்பானை பொருட்கள், கலைநயம் மிக்க கைவினைப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள் மற்றும் அரங்குகள் அமைந்துள்ளன. குழந்தைகள் விரும்பும் வகையில் டோரா டோரா, பால் பைட் கேம்ஸ், ட்ராகன் டிரைன், 3டி, படகு சவாரி, ஜம்பிங் கேம்ஸ், குழந்தைகள் ஓட்டும் கார், பைக் சவாரி மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. மேலும் பொருட்காட்சி அரங்கத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள லண்டன் பிரிட்ஜ், துபாய் சிட்டி கலீபா டவர், ரிப்பன் பில்டிங் மற்றும் பூமி உருண்டை ஆகியவற்றை கண்டுகளித்து பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் புதுமையாக பல வருடங்களுக்கு பிறகு சாகச மரணக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 மாருதி கார் மற்றும் 6 மோட்டார் சைக்கிள் கொண்டு சாகச வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். வரும் ஜூலை 2-ந் தேதி வரை இப்பொருட்காட்சி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. 3 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சலுகையாக நுழைவு கட்டணம் ரூ.60 வசூலிக்கப்படுகிறது என்று நிர்வாகத்தினர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்