எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7,411 பேர் எழுதுகின்றனர்
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7,411 பேர் எழுதுகின்றனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7,411 பேர் எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 3,685 மாணவர்கள் மற்றும் 3,726 மாணவிகள் என மொத்தம் 7,411 பேர் எழுதுகின்றனர். இதற்காக 59 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேர்வு பணியில் 62 முதன்மை கண்காணிப்பாளர்கள், 62 துறை அலுவலர்கள், 140 அலுவலக பணியாளர்கள், 625 அறை கண்காணிப்பாளர்கள், 23 வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் என 912 பேர் ஈடுபட்டுள்ளனர்.
நுழைவுச்சீட்டு எண்
இதேபோன்று மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 88 பேர் அடங்கிய பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருக்கைகளில் மாணவ-மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண் எழுதும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு அறையில் மாணவ-மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண்ணை எழுதினர். தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு பஸ்கள் தடையில்லாமல் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.