சீனிவாச பெருமாள் கோவில் வைகாசி திருவோண பெருவிழா

சீனிவாச பெருமாள் கோவில் வைகாசி திருவோண பெருவிழா

Update: 2023-06-08 21:04 GMT

பாபநாசம்:

பாபநாசம் பங்கஜவல்லி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் வைகாசி திருவோண பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், சகல பரிகார தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது. ஹோமத்தை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.மாலையில் கருட வாகன புறப்பாடும் நடந்தது. விழாவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி, தக்கார் லட்சுமி, பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், செயலாளர் வெங்கடேசன், கணக்கர் முருகுபாண்டியன், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்