நடுக்கடலில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்..!
நடுக்கடலில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் 6 பேர் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 6 பேர் மீது திடீரென இரும்பு பைப்-களை கொண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியதுடன் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்களுக்காக விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்திதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை கடற்படை தாக்குதலில் 5 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.