வசந்த மாளிகை இலவச காட்சி

ஜோலார்பேட்டையில் வசந்த மாளிகை படம் இலவசமாக காண்பிக்கப்பட்டது.

Update: 2023-07-30 17:55 GMT

சிவாஜி கணேசன் நினைவு நாள் மற்றும் வசந்த மாளிகை பொன் விழாவை முன்னிட்டு அகில இந்திய சிவாஜி கணேசன் நற்பணி மன்றம் சார்பில் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதியில் உள்ள மஞ்சு திரையரங்கில் டிஜிட்டல் முறையில் வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படம் பொது மக்களுக்காக தினசரி 4 காட்சிகள் தொடர்ந்து ஒரு வாரம் இலவசமாக திரையிடப்படுகிறது.

நேற்று நடைபெற்ற இலவச முதல் காட்சி திரையிடப்படும் நிகழ்ச்சிக்கு மஞ்சு தியேட்டர் உரிமையாளர் எக்ஸெல் ஜி.குமரேசன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட சிவாஜி கணேசன் நற்பணி மன்ற தலைவர் சீனிவாசன் படம் பார்க்க வந்த அனைவருக்கும் லட்டு கொடுத்து இலவச காட்சிக்கு பொது மக்களை அனுப்பி வைத்தார்.

மேலும் இவ்விழாவில் சிவாஜி கணேசன் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் கனகராஜ், மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சரவணன், சின்னதம்பி, மணி, வேனு, குமார், கேசவன், தண்டபாணி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று ஒரு நாளில் 4 காட்சிகளில் முதியவர்கள், பெண்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இலவசமாக கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்