சிதம்பரம் அருகேடிரோன் மூலம் பருத்தி செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணிகலெக்டர் தொடங்கி வைத்தார்
சிதம்பரம் அருகே டிரோன் மூலம் பருத்தி செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அண்ணாமலை நகர்,
கடலூர் மாவட்டம் குமராட்சி வட்டார தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி கிராமத்தில் பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்து பார்வையிட்டதுடன், அங்கிருந்த விவசாயிகளிடம் நவீன தொழில்நுட்பத்தில் மருந்து தெளிக்கும் முறை குறித்து விளக்கி கூறினார். அப்போது தாசில்தார்கள் சிதம்பரம் செல்வகுமார், காட்டுமன்னார்கோவில் தமிழ்ச்செல்வன், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) மோகன்ராஜ், குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ், உதவி வேளாண் அலுவலர்கள் மாலினி, ராஜலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் சேது மாதவன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசித்ரா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து தெற்கு மாங்குடி கிராமத்தில் விதை பண்ணை வயலையும், நலன்புத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.