மதுரை டி.கல்லுப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.;

Update:2023-10-19 04:45 IST

பேரையூர்,

மதுரை  டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் பகுதியில் நாய்களால் கடிபட்ட நிலையில் புள்ளிமான் ஒன்று அப்பகுதியில் இருந்த முள் புதர்களில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும், தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு டி.கல்லுப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் வந்து புதரில் காயம் அடைந்த நிலையில் இருந்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட புள்ளிமான் சாப்டூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மீட்கப்பட்ட புள்ளிமான் இறந்தது. மானை பிரேத பரிசோதனை செய்து வனத்துறையினர் சாப்டூர் கணவாய் சரகத்தில் புதைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்