நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி;

Update:2023-05-14 00:15 IST

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கோவில் களம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் 3 வயது ஆண் புள்ளிமான் இரை தேடி வந்தது.அப்போது அந்தப் பகுதியில் இருந்த நாய்கள் மானை துரத்தி கடித்தன. இதில் மான் பலத்த காயம் அடைந்து. இதுகுறித்து அந்த பகுதியினர் உடனடியாக வனவர் உதயகுமார் மற்றும் வனக்காப்பாளர் வீரையா ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து புள்ளி மானை மீட்டு கொண்டு செல்லும் வழியில் புள்ளிமான் இறந்தது. இதையடுத்து இறந்த புள்ளிமான் முறையூர் கால்நடை மருத்துவர் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்