கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம்

மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று உள்ளது.

Update: 2022-09-13 18:51 GMT

மன்னார்குடி;

மன்னார்குடி தரணி மெட்ரிக் மெல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட அளவிளான கபடி போட்டி நடந்தது. இதில் கட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் வெற்றிக்காக பயிற்சி அளித்த உடற் கல்வி ஆசிரியர் உதயகுமார், தலைமை ஆசிரியர் பி.மலர்கொடி, மாணவிகளை அழைத்துச்சென்ற ஆசிரியர்கள் காந்திராஜு, அருள் ஆரோக்கியபேட்ரிக் மற்றும் ஆசிரியர்களை மாவட்டக்கல்வி அலுவலர் ஆர்.மணிவண்ணன், பெற்றோர் சங்க தலைவர் தங்க சேதுராஜன், ஊராட்சி தலைவர் எஸ்.அழகு விஜயன், மாவட்ட அமச்சூர் கபடி கழக தலைவர் ராஜ ராஜேந்திரன் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்