ஷெம்போர்டு பள்ளியில் விளையாட்டு விழா
ஷெம்போர்டு பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
வாணியம்பாடியில் உள்ள ெஷம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் கிருபாகரன், பொருளாளர் சாட்ஜி குமார், துணை தலைவர் கனகராஜ், இணை செயலாளர் சிங்காரவேலன், நிர்வாகிகள் வி.கே.ஆனந்த், சிவகுமார், ஜார்ஜீனா, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் டாக்டர் பிரசாந்த் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் பங்கேற்று, விழாவை தொடங்கிவைத்து பேசினார். தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கினார். விழாவில், நிர்வாக அலுவலர் கார்த்திக், சிவா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.