இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
நாங்குநேரி பகுதிகளில் தி.மு.க. சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இட்டமொழி:
நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதகுளம் மற்றும் பல்வேறு கிராமங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களுக்கு கைப்பந்து மற்றும் நெட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு முன்னிலை வகித்தார். அயலக அணி துணை பொறுப்பாளர் சிங்கப்பூர் மகா கிப்ட்சன் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், ஒன்றிய துணைச்செயலாளர் சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.