இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இட்டமொழி:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மூன்றடைப்பு அருகே உள்ள அ.சாத்தான்குளம், ஆழ்வாநேரி, கரந்தாநேரி ஊராட்சி நெடுங்குளம், உன்னங்குளம் ஊராட்சி ஸ்ரீரெங்கராஜபுரம், சிங்கனேரி ஊராட்சி காரங்காடு, இறைப்புவாரி ஊராட்சி புதுக்குளம், இலங்குளம் ஊராட்சி பற்பநாதபுரம் மற்றும் மறுகால்குறிச்சி கிராமங்களில் தி.மு.க. அயலக அணி மாநில துணை அமைப்பாளர் எஸ்.ஜே.மகா கிப்ட்சன் தனது சொந்த செலவில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களான கிரிக்கெட் மட்டை, ஸ்டெம்பு, பந்து போன்றவற்றை வழங்கினார்.
நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.