இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-06-20 19:11 GMT

இட்டமொழி:

பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சீவலப்பேரி பஞ்சாயத்து சந்தைப்பேட்டை கிராமத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், கிரிக்கெட் உபகரணங்களான மட்டை, பந்து, ஸ்டெம்பு போன்றவற்றை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மேலும் களக்காடு வடக்கு வட்டாரம் தேவநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெருமாள்குளம் கிராமத்தில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி கட்டிட பணிக்கு நிதி உதவியும் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்