அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி
தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. இதில் 350 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. இதில் 350 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
முதல்-அமைச்சர் கோப்பை
தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. 5 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான போட்டி மற்றும் பொதுப் பிரிவினருக்கான போட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்து உள்ளன. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் நேற்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
350 பேர் பங்கேற்பு
போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ்.அந்தோணி அதிஷ்டராஜ் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர்களுக்கு கைப்பந்து, கபடி, இறகுபந்து, தடகள போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள், அலுவலர்கள் சுமார் 350 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.