விபத்துக்களை தடுக்க புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்

ஆணாய்பிறந்தானில் விபத்துக்களை தடுக்க புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-25 16:19 GMT



ஆணாய்பிறந்தானில் விபத்துக்களை தடுக்க புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரை பகுதியில் இருந்து...

திருவண்ணாமலை நகரை சுற்றி புறவழிச்சாலை (ரிங் ரோடு) அமைக்கப்பட்டு வருகின்றது. திருவண்ணாமலை அருகே உள்ள ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இருந்து பண்டிதப்பட்டிற்கு செல்லும் வழியில் புறவழிச்சாலை அமைந்து உள்ளது.

அந்த இடத்தில் உள்ள புறவழிச்சாலையானது கிராமத்தில் உள்ள தரை பகுதியில் இருந்து சுமார் 5 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளது.

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல மேம்பாலத்தில் ஏறி செல்வது போன்று தரையில் இருந்து ஏறி புறவழிச்சாலைக்கு சென்று மற்றொரு பகுதியில் இறங்க வேண்டும்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

இந்த சாலையை ஆணாய்பிறந்தான், காவேரியாம்பூண்டி, கணந்தம்பூண்டி, பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்த புறவழிச்சாலையில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றனர். ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மக்கள் செல்லும் போது புறவழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்பு சம்பவங்களுக்கு அவ்வப்போது நடைபெறுகிறது.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பண்டிதப்பட்டில் மக்கள் நடமாடும் பகுதியில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க புறவழிச்சாலையில் வேகத்தடை மற்றும் சாலையோர தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்