மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

Update: 2023-10-09 18:45 GMT

காளையார்கோவில்

பேச்சுப்போட்டி

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்ட தி.மு.க பொறியாளர் அணி சார்பில் காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.முருகப்பன் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், மாநில இலக்கிய அணி தென்னவன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

இலவச மின்சாரம்

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மற்ற மாநில முதல்வர்களுக்கு முன்னோடியாக இருந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இருந்துள்ளது.

அவரது ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதி, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செயல்படுத்தினார். தனியார் பஸ்களை அரசுடமையாக்கி போக்குவரத்து கழகங்களை உருவாக்கி கடைக்கோடி கிராமங்களுக்கும் பஸ் போக்குவரத்தை கொண்டு வந்தார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை போராடி பெற்றுத்தந்தவர். கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பெருமை சேர்த்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பிரதீப், புனித மைக்கேல் பொறியியல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் பொறியாளர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொறியாளர் அணி அமைப்பாளர் ஏ.ஆர்.முருகப்பன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்