முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதக்கிருத்திகை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு சந்தனம், பால், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக உலக மக்கள் நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதேபோல விஜயகரிசல்குளம் வழிவிடு பாலமுருகன் கோவில், பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள பழனியாண்டவர் கோவிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.