காசி விஸ்வநாதர் கோவிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

ஆஷாட நவராத்திரி நிறைவு விழாவையொட்டிகாசி விஸ்வநாதர் கோவிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-06-28 18:45 GMT

ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி நவமி திதி வரை ஆஷாட நவராத்திரி விழா 9 நாள்கள் நடைபெறுகிறது. வாராகி அம்மனுக்கு உகந்த ஆஷாட நவராத்திரியின் 9 நாள்களும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிக்கரையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள மங்கள வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு, பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்