அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு

சீர்காழி பகுதி கோவில்களில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-12-16 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி சட்டநாதர் கோவிலில் அஷ்டபைரவர் சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த அஷ்டபைரவருக்கு நேற்று அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது பல்வேறு மங்களப்பொருட்களால் அஷ்ட பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பூம்புகார் அருகே பிரசித்தி பெற்ற சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், திருப்புங்கூர் சிவலோக நாதசுவாமி கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்