கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில்
திருவெண்காடு அருகே நாங்கூர் பகுதிகளில் 11 பெருமாள் கோவில்கள் உள்ளன. நேற்று இரண்டாவது புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமஞ்சனமும், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அண்ணனாக விளங்கும் அண்ணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கணக்கர் ரத்தினவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆஞ்சேநயர் கோவில்
அதேபோல் திருகுரவலூர் உக்கிர நரசிம்மர், மங்கை மடம் வீர நரசிம்மர், திருநகரி யோக, இரணிய நரசிம்மர்கள் மற்றும் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.