முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாக விழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-06-02 19:09 GMT

வைகாசி விசாக விழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த ேகாவிலில் வைகாசி விசாக விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நேற்று ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, காவடி ஏந்தி, பால்குடம் எடுத்து, அரோகரா முழக்கத்துடன் ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்களுடன் தேரோடும் வீதிகளில் ஊர்வலம் நடைபெற்று பழனி ஆண்டவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் வால சுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாலாபிஷேகம்

வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல்குளத்தில் வழிவிடு பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பிள்ளையார் கோவிலில் இருந்து வழிவிடு பாலமுருகன் கோவில் வரை காவடி மற்றும் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து வழிவிடு பால முருகனுக்கு பாலாபிஷேகம் நடத்தினர்.

அதேபோல துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான மாலை அணிந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். இதையடுத்து பாலசுப்ரமணியருக்கு பாலாபிஷேகம் செய்தனர். குழந்தை வரம் வேண்டியும், திருமண தடை நீங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா காலனியில் உள்ள முருகன் கோவிலிலும் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் ெரங்கநாதபுரம் பாலமுருகன் கோவில், காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில், சாத்தூர், காரியாபட்டி, ராஜபாளையம், சிவகாசி, தளவாய்புரம், சேத்தூர், திருச்சுழி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்