முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் முருகன் கோவிலில் விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.