விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேலாயுதம்பாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வளர்பிறை சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதேபோல காகிதபுரம், ஓம் சக்தி நகர், ஈ.ஐ.டி. பாரி பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.