விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-10-02 18:06 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சின்னக்கடை வீதியில் உள்ள பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோவில், தேரடியில் உள்ள மங்காய் விநாயகர் கோவில், அரண்மனை தெருவில் உள்ள சக்தி விநாயகர் கோவில், தேரடியில் உள்ள விநாயகர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்