வண்டுறை மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் தை முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. . முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், தேன், திரவியம், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காணப்பிக்கப்பட்டது. இதேபோல் வாய்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.