உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருகுறவளூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-07-08 18:26 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருகுறவளூரில் உக்கிர நரசிம்மர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் ஆனிமாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக மகா சுதர்சன யாகம் நடந்தது. இதை தொடர்ந்து நரசிம்மருக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்