திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சுவாதி நட்சத்திரத்தையொட்டி திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே பஞ்ச நரசிம்மர் கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் முதன்மையாக விளங்குவது திருக்குரவலூர் உக்கர நரசிம்மர் ஆகும். இவர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். மேலும் திருமங்கை ஆழ்வார் இந்த ஊரில் பிறந்து இவரை வழிபட்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. நேற்று தை மாத சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு மகா சுதர்சன ஹோமம், மகா அபிஷேகமும் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.