ஆனைமலையில் சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆனைமலையில் சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Update: 2023-04-05 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ஆழியாற்றங்கரையில் பழமைவாய்ந்த சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளில், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், நெல்லிபொடி, வில்வப்பொடி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து தீபாராதனை காண்பித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்