பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருச்சுழி,
திருச்சுழி திருமேனிநாதர் கோவில், சவ்வாஸ்புரம் வரதராஜ பெருமாள்கோவில், எம்.ரெட்டியபட்டி வரதராஜ பெருமாள் கோவில்களில் சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வரதராஜப் பெருமாளுக்கு பால், சந்தனம், மற்றும் மஞ்சள் உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் அபிஷேகம், தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.