பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-10-08 20:29 GMT

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தா.பேட்டையில் வேணுகோபாலசுவாமி, உத்தண்டம்பட்டி கலியுக ராஜகோபால் சுவாமி, பிள்ளாபாளையம் நரசிங்க பெருமாள், மாவலிப்பட்டி வேணுகோபால சுவாமி, நீலியாம்பட்டி தலைமலையில் உள்ள சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள், அடிவாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

துறையூரை அடுத்த பெருமாள் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று திரளான பக்தர்கள் அதிகாலை முதலே பெருமாளை தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோவிலுக்கு பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக செல்லும்போது, அவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்