சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

தாழையாத்தம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-27 13:33 GMT

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தாழையாத்தம் ஊராட்சி நத்தம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாழையாத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அமுலுஅமர் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வி நித்தியானந்தம், சூரியகலா மனோஜ்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபாபாலாஜி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கோ.அந்துவன் திட்ட விளக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ சத்யானந்தம் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் நத்தம் பிரதீஷ் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லப்பாடி கால்நடை மருத்துவர் எம்.ரமேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் பசுமாடுகள், காளைமாடுகள், ஆடுகள் கோழிகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகள் என 920 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்