தீபாவளி பண்டிகை: ரூ.115 கோடிக்கு இனிப்பு, கார வகைகள் விற்பனை- ஆவின்

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆவின் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-30 20:08 GMT

சென்னை,

ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே இவ்வகையான சிறப்பு இனிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட்டது. தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்