பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

Update: 2023-06-09 18:49 GMT

சென்னை,

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேலூரில் இருந்து ஜூலை 2-ந்தேதி, 30-ந்தேதி, ஆகஸ்டு 30-ந்தேதி, செப்டம்பர் 29-ந்தேதி, அக்டோபர் 27-ந்தேதி, நவம்பர் 26-ந்தேதி, டிசம்பர் 25-ந்தேதிகளில் இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் இரவு 12 மணி 5 நிமிடத்தில் திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து ஜூலை 3-ந்தேதி, 31-ந்தேதி, ஆகஸ்டு 31-ந்தேதி, செப்டம்பர் 29-ந்தேதி, அக்டோபர் 28-ந்தேதி, நவம்பர் 27-ந்தேதி, டிசம்பர் 26-ந்தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் சென்றடையும்.

இதேபோல, விழுப்புரத்தில் இருந்து ஜூலை 2-ந்தேதி, 30-ந்தேதி, ஆகஸ்டு 30-ந்தேதி, செப்டம்பர் 28-ந்தேதி, அக்டோபர் 27-ந்தேதி, நவம்பர் 26-ந்தேதி, டிசம்பர் 25-ந்தேதிகளில் காலை 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து ஜூலை 2-ந்தேதி, 30-ந்தேதி, ஆகஸ்டு 30-ந்தேதி, செப்டம்பர் 28-ந்தேதி, அக்டோபர் 27-ந்தேதி, நவம்பர் 26-ந்தேதி, டிசம்பர் 25-ந்தேதிகளில் பகல் 12.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

விழுப்புரத்தில் இருந்து ஜூலை 2-ந்தேதி, 30-ந்தேதி, ஆகஸ்டு 30-ந்தேதி, செப்டம்பர் 28-ந்தேதி, அக்டோபர் 27-ந்தேதி, நவம்பர் 26-ந்தேதி, டிசம்பர் 25-ந்தேதிகளில் இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதேநாள் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து ஜூலை 3-ந்தேதி, 31-ந்தேதி, ஆகஸ்டு 31-ந்தேதி, செப்டம்பர் 29-ந்தேதி, அக்டோபர் 28-ந்தேதி, நவம்பர் 27-ந்தேதி, டிசம்பர் 26-ந்தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு அதேநாள் காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்