செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது
சாத்தான்குளம்:
சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள், அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கு தீவிர வயிற்று போக்கை கட்டுப்படுத்து குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மருத்துவ அலுவலர் வீரேஷ் தலைமை தாங்கினார். இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டால் கட்டுப்படுத்தும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், கை கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.