தாம்பரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தாம்பரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2022-10-22 01:51 GMT

கோப்புப்படம்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்க்கண்ட ஊர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

* கொச்சுவேலி-தாம்பரம் (06044) இடையே பண்டிகைக்கால சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.40 மணிக்கு இயக்கப்படுகிறது.

* தாம்பரம்-கொச்சுவேலி (06043) இடையே பண்டிகைக்கால சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு இயக்கப்படுகிறது.

* ஆமதாபாத்-திருச்சி (09419) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி மற்றும் நவம்பர் 3,10,17,24-ந் தேதிகளில் காலை 9.30 மணிக்கு இயக்கப்படுகிறது.

* திருச்சி-ஆமதாபாத் (09420) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி மற்றும் நவம்பர் 6,13,20,27-ந் தேதிகளில் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படுகிறது.

* நாகர்கோவில்-பெங்களூரு (வண்டி எண்: 06052) இடையே சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி இரவு 7.35 மணிக்கு இயக்கப்படுகிறது.

* பெங்களூரு-நாகர்கோவில் (06051) இடையே சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி காலை 10.15 மணிக்கு இயக்கப்படுகிறது.

* திருவனந்தபுரம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (06056) இடையே சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி இரவு 7.40 மணிக்கு இயக்கப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம் (06055) இடையே சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி மதியம் 3.10 மணிக்கு இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்