சிறப்பு யாகம்

கீழப்பாவூர் நரசிம்ம பீடத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.;

Update: 2023-06-26 19:00 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் சாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தில் நவசண்டி மகா யாகம் நடந்தது. அம்பாளை மாத்ருகா அட்சரம் என்று கூறக்கூடிய 51 அட்சரங்களால் ஆராதனை செய்வது போன்று, மகாசூலினி துர்காவுக்கு 51 மூலிகைகளால் நவசண்டி மகா யாகம் நடைபெற்றது.

காலை 8 மணி முதல் கும்ப பூஜை, ஆவரண பூஜை, சண்டி நவாட்சரி ஜெபம், சண்டி பாராயணம், நவசண்டி மகாயாகம், மகா பூர்ணாகுதி, மகாபலி, சுவாசினி பூஜை, வடுக பைரவர் பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தின் மகேஸ்வர கனபாடிகள், ராமசுவாமி ஆகியோர் செய்து இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்