தோகமலை அருகே ஆர்டிமலை விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு ஆனி மாத திருமஞ்சன சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.