மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு பூஜை
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.;
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை முன்னிட்டு பக்தோசி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அமிர்த்வல்லி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தோசிப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி தங்க கேடயத்திலும், தாயார் வெள்ளி கேடயத்திலும் எழுந்தளினார்கள். தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.