லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.;
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் நாச்சியார் உற்சவத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தங்க ஆபரணங்கள் அணிவித்து, மலர்மாலை அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.