மழை வேண்டி சிறப்பு பூஜை
களக்காடு அருகே மழை வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் சமண மலைப் பகவதி அம்மன் கோவிலில் மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதையொட்டி கும்பத்தில் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மலையில் உள்ள சுனையில் புனித நீரை ஊற்றி பூஜை செய்தனர்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை செய்தனர். விழா நடந்து கொண்டிருந்த போதே திடீர் என அப்பகுதியில் அரை மணி நேரம் மழை பெய்தது. வெயில் வலுத்து வந்த நிலையில் பூஜையின் போது மழை கொட்டியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மேலும் பூஜையின் முடிவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.