கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜை
மாரச்சந்திரத்தில் கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரச்சந்திரம் கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நோய், நொடியின்றி வாழவும் கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. லக்கசந்திரம், தேர்ப்பேட்டை, மாரச்சந்திரம், தொட்டி, தேன்கனிக்கோட்டை, திப்பசந்திரம், திம்மசந்திரம் ஆகிய 7 கிராமங்களில் இருந்து மாரியம்மன், முத்தாலம்மன், முத்தப்பா, பாலகுழி மாதம்மா, சொல்லேபுரம்மா, கங்கம்மா, லக்கசந்திரம் மாரியம்மன் ஆகிய 7 கிராம தேவதைகள் ஊர்வலமாக பல்லக்கில் மாரசந்திரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் கிராம தேவதைகளை பல்லக்கில் சுமந்து சென்று அக்னி குண்டத்தில் இறங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.