விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூரில் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்
பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பரமத்தி வேலூர், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவில், வேலூர் சக்திநகரில் உள்ள சக்தி விநாயகர், பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள வல்லப விநாயகர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகப் பெருமான், நன்செய் இடையார் மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர், வேலூர் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பாண்டமங்கலம் காசிவிஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று புரட்டாசி மாத தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர், பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர்.