தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Update: 2023-02-22 19:30 GMT

நாமக்கல:-

சாம்பல் புதன்கிழமையை யொட்டி நேற்று நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடித்து வருகின்றனர். இந்த 40 நாட்கள் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

இந்த தவக்காலம் தொடங்கும் நாள்தான் சாம்பல் புதன்கிழமை ஆகும். இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். அந்த வகையில் நேற்று காலையில் நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சிலுவை அடையாளம்

இதை பங்குதந்தை செல்வம் நடத்தினார். பிரார்த்தனை முடிந்ததும் அவர் சாம்பலால் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தை வைத்தார். இதேபோல் மாலையில் நாமக்கல் என்.ஜி.ஓ.காலனியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் சாம்பல் புதன்கிழமையையொட்டி நேற்று நாமக்கல் சி.எஸ்.ஐ. சர்ச், பெந்தேகோஸ்தே தேவாலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்