மாதா கோவிலில் மீனவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
தூத்துக்குடி மாதா கோவிலில் மீனவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சிந்தாதிரை மாதா ஆலய கெபி உள்ளது. இந்த ஆலயத்தில் திரேஸ்புரம் பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள், கடலுக்குச் செல்வதற்கு முன்னர் வழிபட்டு செல்வது வழக்கம். இங்கு நேற்று நடந்த காலை ஆராதனையில் நாட்டுப்படகு மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் ஆகியோருக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டியும், அவர்களுக்கு அதிக அளவு மீன்கள் கிடைக்க வேண்டியும் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.