சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலங்குளம்
ஆலங்குளம் சிமெண்டு ஆலை காலனியில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர், சங்கரமூர்த்தி பட்டியில் உள்ள சங்கரலிங்கசாமி, எதிர்கோட்டை துணை கண்ட லிங்கேஸ்வரர், கண்மாய் பட்டி குபேர லிங்கேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.