விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், இளநீர்,பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அருகம் புல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இதேபோல், காகிதபுரம், புகழிமலை, ஈ.ஐ.டி பாரி பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.