அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-08-04 18:45 GMT

ஆடி மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.

கோவில்களில் விளக்கு பூஜை, ஆடிவெள்ளி ஊஞ்சல் உற்சவ பூஜை, குங்கும அர்ச்சனைகள் நடத்தப்பட்டு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

விழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவில்களில் கூழ்காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினர்.

ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள மல்லம்மாள் காளியம்மன், வெட்டுடையாள் காளியம்மன், பெரியமாரியம்மன், ராஜமாரியம்மன், கருமாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்