அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதேபோல் புன்னம், தவுட்டுப்பாளையம், திருக்காடுதுறை, நன்செய் புகழூர் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.